ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்தாண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளது.
Trending
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியானது தங்களது முதல் லீக் ஆட்டத்தை ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 09ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். பாகிஸ்தன் அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரையில் முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.
மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் அணியின் நம்பர் ஒன் பேட்டரும் கேப்டனுமான பாபர் ஆசாம் களமிறங்குவார். மேற்கொண்டு நான்காம் இடத்தில் ஃபகர் ஸமானும், ஆல் ரவுண்டர்கள் இஃப்திகார் அஹ்மத், ஷதாப் கான் மற்றும் இமாத் வசிம் ஆகியோர் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அமெரிக்க பிட்ச்களில் இவர்கள் எதிரணிக்கும் பெரும் சவாலை கொடுக்கக்கூடிய வீரர்களாக பார்க்கப்படுகின்றன.
பாகிஸ்தானி அணியின் பலமே அவர்களின் வேகப்பந்து வீச்சு தான். எனவே ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவுஃப் மற்றும் முகமது ஆமிர் மீது பெரிய பொறுப்பு இருக்கும். இந்த நான்கு பந்துவீச்சாளர்களும் ஒவ்வொரு போட்டியில் பாகிஸ்தானின் பலமாக மாற முடியும். அதனால் நிச்சயம் இவர்களது பங்களிப்பானது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தானின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்: சாம் அயூப், முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஸமான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்.
Win Big, Make Your Cricket Tales Now