
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரீஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மார்க் வுட் பிடித்த கேட்ச்சானது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை ஆதில் ரஷித் வீச அந்த ஓவரின் இரண்டாவது பந்தை லெக் திசையில் டி காக் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். ஆனால் அவர் அடித்த பந்தானது நேராக அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மார்க் வுட் கைகளில் தஞ்சமடைந்தது.