
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா - இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. அந்தவகையில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஆறு ஓவர்களிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்பதீன் நைப் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் தனது முதல் ஓவரை வீசிய காசிசோ ரபாடா முதல் பந்திலேயே இப்ராஹிம் ஸத்ரானை களீன் போல்டாக்கியதுடன், அந்த ஓவரின் நான்காவது பந்தில் அனுபவ வீரர் முகமது நபியின் விக்கெட்டையும் க்ளீன் போல்ட்டின் மூலம் கைப்பற்றி மிரட்டினார்.