
T20 WC 33rd Match: India set a target on 211 runs against Afghanistan (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
மேலும் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் முறையில் இருவரும் 140 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் ரோஹித் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கேஎல் ராகுலும் 69 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.