டி20 உலகக்கோப்பை : அணியில் இடம்பிடிக்கப்போகும் 18 பேர் யார் யார்?
டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இத்தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2ஆவது சுற்றில் இருந்து விளையாடும்.
Trending
இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி, அதிலிருந்து 4 அணிகள் 2ஆவது சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. வருகிற 10ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் அதிகபடியான இளம் வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது இடம் எந்தவொரு கேள்வியும் இன்றி உறுதியாகியுள்ளது. மேலும் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் என இளம் வீரர்கள் வரிசைக்கட்டி நின்றுள்ளனர்.
இதனால் ஷிகர் தவான், மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் ஆகியோருக்கான இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. அதேசமயம் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது.
இதில் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடமல் உள்ளதால், அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தே வாய்ப்பு வழங்கப்படும்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் அசத்திய சேத்தன் சக்காரியா, ராகுல் சஹார் ஆகியோரும் இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளதால் அவர்களின் வாய்ப்பும் பிரகாசமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
உத்தேச இந்திய அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், ஷிகர் தவான், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், சேத்தன் சகாரியா , ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, குர்னால் பாண்டியா,பிரித்வி ஷா.
Win Big, Make Your Cricket Tales Now