
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தான் தற்போது பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் சாதாரண முதுகு வலி தான் என்றும், ஒரு சில போட்டிகளை தவறவிடுவார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்யும் பணிகள் தீவீரமடைந்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதில் முதலில் இருப்பதே கேப்டன் ரோகித் சர்மா தான். 35 வயதாகும் ரோஹித்திற்கு அதிக உடல் எடையால் அடிக்கடி தசைப்பிடிப்பு பிரச்சினை ஏற்படும். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் கூட காயத்தினால் இன்னிங்ஸின் பாதியிலேயே வெளியேறினார். அடுத்த போட்டியில் விளையாடவில்லை. எனவே அவருக்கு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பிசிசிஐ மருத்துவக்குழு அதிக கண்காணிப்புடன் இருக்கிறார்கள்.