டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்றைய போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது. சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 12 பந்தில் 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இணைந்து பொறுப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். ரோஹித் சர்மா சிக்ஸர்கள் அடித்து ஆடினாலும், அவரது வழக்கமான ஃப்ளோவில் ஆடவில்லை. கோலியும் பொறுமையாகவே ஆடினார். இந்திய அணியின் ஸ்கோர் மந்தமாகவே இருந்தது.
Trending
அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 39 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ரோஹித்தும் கோலியும் இணைந்து 73 ரன்களை சேர்த்தனர். 12 ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்தபோது ரோஹித் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, கோலியும் அடித்து விளையாடினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்த கோலி, இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை எட்டினார். ரோஹித், கோலி மற்றும் சூர்யகுமார்(51) ஆகிய மூவருமே அரைசதம் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் ஒரு ரன்னிலும், மேக்ஸ் ஓடவுட், பாஸ் டி லீட் தலா 16 ரன்களிலும், காலின் அக்கர்மேன் 17 ரனளிலும், டாம் கூப்பர் 9 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இந்திய அணி பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், அக்ஸர், புவனேஷ்வர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், இந்த சீசனில் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now