
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இ இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் களமிறங்கினர்.தொடக்கத்தில் ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் பாபர் அசாம் , அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து முகமது ரிஸ்வான் 4 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வெளியேறினார்.இதனால் பாகிஸ்தான் 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஷான் மசூத் - இஃப்திகர் அகமது இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். ஒரு புறம் ஷான் மசூத் நிதானமாக விளையாட ,மறுபுறம் இஃப்திகர் அகமது அதிரடி காட்டினார். அக்சர் படேலின் ஒரு ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்க விட்ட. இஃப்திகர் அகமது அரைசதம் கடந்தார்.பின்னர் முகமது ஷமி பந்துவீச்சில் அவர் 34 பந்துகளில் 51 ரன்களில் வெளியேறினார்.