
T20 World Cup 2022: Scotland Post a competitive total against West Indies! (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றில் 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். அதன்பின் 20 ரன்களில் மைக்கேல் ஜோன்ஸ் ஆட்டமிழக்க, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
அதன்பின் ஆட்டம் தொடங்கிய நிலையில் மேத்யூ கிராஸ் 3, ரிச்சி பெர்ரிங்டன் 16, காலம் மெக்லீட் 23, மைக்கேல் லீஸ்க் 4 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜ் முன்ஸி அரைசதம் கடந்து அசத்தினார்.