
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 23ஆம் தேதி எதிர் கொள்கிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாற்றுவீரர் குறித்து பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ் தீபக்சாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் முகமது ஷமி கரோனா தொற்று காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்துள்ளார் .
அதில், “பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு தான். இருப்பினும் மற்ற வீரர்களுக்கு இதை வாய்ப்பாக நான் கருதுகிறேன். முகமது ஷமி மாற்று வீரராக அறிவிக்கப்படுவாரா என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த அவர் தற்போது கரோனா அச்சுறுத்தலால் தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.