
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் பிற அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.
அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளது. முன்ந்தாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டதை தாண்டி, அந்த அணி நிர்வாகம் செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தது.
ஏனெனில் ஐசிசி தொடருக்கு முன்னர் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் செய்தியாளர்களைச் சந்தித்து அணிகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி நடைபெறும் அந்த செய்தியாளர் சந்திப்பில் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள், அணி வீரர்கள் ஆகியோரே பங்கேற்று அணியை வெளியீடுவர். ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமானது இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை அறிவிப்பதற்காக இரண்டு சிறுவர்களை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க செய்தது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.