டி20 உலகக்கோப்பை: கம்பேக் கொடுக்கும் அஸ்வின்; ஆலோசகராக தோனி!
டி20 உலக கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள். சூர்யகுமார் யாதவ் எதிர்பார்க்கப்பட்டபடியே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா. ஸ்பின்னர்களாக அஸ்வின், ராகுல் சாஹர், அக்ஸர் படேல் ஆகியோருடன் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியும் எடுக்கப்பட்டுள்ளார்.
Trending
வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். கடைசியாக 2017ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஆடிய மூத்த வீரர் அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் எடுக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான அணியில் சீனியர் ஸ்பின்னர் அஸ்வின் தேவை என்பதால் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் இல்லை.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முதல் டி20 உலக கோப்பையை வென்றவருமான மகேந்திர சிங் தோனி, டி20 கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவரது அனுபவம் இந்திய அணிக்கு உதவும் என்பதால் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
ரிசர்வ் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.
Win Big, Make Your Cricket Tales Now