
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷாகித் அஃப்ரிடியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த ஜாம்பவான் தடகள வீரர் உசைன் போல்ட் ஆகியோர் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் தூதர்களாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடியும் இணைந்துள்ளார்.