Advertisement

டி20 உலகக்கோப்பை: இந்த பிட்ச் வேகத்திற்கும், ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது - ரோஹித் சர்மா!

கோலி விளையாடிய இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது. தலை வணங்குகிறேன் கோலி என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
T20 World Cup: Kohli's 82 not out has to be the best innings he has played for India, says Rohit
T20 World Cup: Kohli's 82 not out has to be the best innings he has played for India, says Rohit (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 23, 2022 • 10:02 PM

டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 23, 2022 • 10:02 PM

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்கள் முகமது ரிஸ்வான் 4, பாபர் அசாம் 0 ஆகியோர் சொதப்பிய நிலையில், அடுத்து ஷான் மசூத் 52, இஃப்திகார் அகமது 51 ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்த நிலையில், இறுதியில் ஷாஹீன் அஃப்ரிடி 16 ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது. அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

Trending

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ராகுல், ரோஹித் தலா 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து சொதப்பினார்கள். அடுத்து சூர்யகுமார் 15, அக்சர் படேல் 2 ஆகியோரும் ஏமாற்றிய நிலையில் அடுத்து கோலி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, ஸ்பின்னர் நவாஸ் வீசிய முதல் பந்தில் ஹார்திக் 40 ஆட்டமிழந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் சிங்கில் எடுத்துக் கொடுக்க கோலி 2,6 என ரன்களை பறக்கவிட்டார். 

சிக்ஸர் அடித்த பந்து நோபால் என அறிவிக்கப்பட்டது. அடுத்து ஒயிட், 3 ரன்கள் சென்றது. 5ஆவது பந்தில் தினேஷ் 1 (2) ஆட்டமிழந்தப் பிறகு அஸ்வின் வந்தார். ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது ஒயிட் சென்றது. கடைசி பந்தில் அஸ்வின் சிங்கில் எடுத்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, ‘‘இந்த பிட்ச் வேகத்திற்கும், ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது. சிறந்த போட்டி. ஒரு பேட்டர் கடைசிவரை நின்று விளையாடினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என கணித்திருந்தோம். அதன் படியே கோலி சிறப்பாக விளையாடினார். இவருடன் ஹார்திக் பாண்டியா அமைத்த பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

கோலி விளையாடிய இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது. தலை வணங்குகிறேன் கோலி. ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதும், எங்களின் மன உறுதியை அதிகமாக்குகிறது’’ எனத் தெரிவித்தார்.

கோலிக்கும், ரோஹித்திற்கும் இடையில் பிரச்சினை இருக்கிறது என வதந்திகள் உலா வரும் நிலையில் கோலி குறித்து ரோஹித் புகழ்ந்து பேசியிருப்பதை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement