ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே இருவரும் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
20 அணிகள் பங்கேற்கும் நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானாது நாளை முதல் முதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே விளையாட இருந்த அமெரிக்க அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், தனது இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது. அதேசமயம் நடப்பு சீசனில் இந்திய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சி ஆட்டம் இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிராபார்ப்புகளும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே இருவரும் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இப்போது உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானைத் தவிர டாப் லெவலில் இல்லாத அணிகளுடன் விளையாடும் என்பதால், அணி வீரர்கள் அனைவரும் சூப்பர் 8 சுற்றுக்கு முன் ஃபார்மில் இருக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது நமக்குச் செயல்படுவதற்கும் நன்றாக உணரத் தொடங்குவதற்கும் வாய்ப்பளிக்கும்.
Trending
ஏனெனில் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் நீங்கள் சிறப்பான ஃபார்மில் இருந்தால் அது முற்றிலும் அணிக்கு பெரும் பலமாக அமையும். அது இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் நடக்கும் என்று நம்புகிறேன். இந்திய அணியில் சிறந்த பினிஷிங் ஆப்ஷன்களைப் பற்றி பேசுகையில், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். இதில் ஹர்திக் பாண்டியா அணியின் ஃபினிஷிங் ரோலை கொண்டிருப்பார் என நம்புகிறேன். அதேசமயம் ஷிவம் தூபே தேவைப்படும் நேரங்களில் களமிறங்கும் வீரராஅக் இருப்பார்.
குறைந்தபட்சம் பிளே ஆஃப் சுற்றுகளில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக செயல்படுத்துபவராக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அதற்கு அவர் தகுதியானவரும் கூட. சமீப காலங்களில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் திறன் குறைந்துவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, மேலும் அவர் முன்வரிசையில் பேட் செய்ய விரும்புவதால் அது நடந்தது. அவர் ஒரு பெரிய பேட்டிங் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது அவருக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவரது பேட்டிங் ஃபார்மானது தொடர்ந்து சரிந்துவிட்டது.
இதனால் அவர் தனது பழைய நிலைப்பாடான ஃபினிஷிங் பணியை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமெ அவர் விரும்பும் சுதந்திரமான ஷாட்டுகளை விளையாட அவருக்கு வாய்ப்பு இருக்கும். மேற்கொண்டு பந்துவீச்சிலும் அவர் ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் செயல்பட்டது போல் இருக்க வேண்டும். அப்படி செய்தால் அது அவருடைய பேட்டிங்கிற்கும் உதவும். ஏனெனில் அவர் இந்திய அணியின் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக இல்லாமல் பேட்டிங் ஆல் ரவுண்டராக விளையாடுகிறார். அதனால் நீங்கள் ஒன்றில் சிறப்பாக செயல்பட்டால் அது மற்றொன்றில் உங்களுக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now