
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு! (Image Source: Google)
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் இன்றைய தினம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்துள்ளது. அதன்படி அனுபவ வீரர் பால் ஸ்டிர்லிங் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் ஆண்ட்ரூ பால்பிர்னி, ஜார்ஜ் டக்ரெல், ஹேரி டெக்ட்ர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.