
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகியு வருகின்றன.
மேலும் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில் நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம் அறிவித்தது. அதன்படி இந்த அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற முகமது அமீர் மற்றும் இமாத் வசிம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ராவுஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, இஃப்திகார் அஹ்மத் போன்ற நட்சத்திர வீரர்களுடன் அசாம் கான், சைம் அயூப் மற்றும் உஸ்மான் கான் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அணியின் துணைக்கேப்டன் யார் என்பதை மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்காதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.