ஐசிசி யு19 உலகக்கோப்பை: பயிற்சியில் இறங்கிய இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியானது தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது.
வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யுஸ்வேந்திர் சஹால், ஷிவம் தூபே, அக்ஸர் படேல் உள்ளிட்ட வீரர்களும் இடம் கிடைத்துள்ளது.
Trending
இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்ற இந்திய அணி வீரர்கள் 2 குழுக்களாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன்படி முதற்கட்டமாக கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோர் இடம் அமெரிக்கா புறப்பட்டனர்.
அதன்பின் சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சஹால், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்களும் இந்திய அணி முகாமில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்திய அணியானது வருன் ஜூன் 1ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது. அதற்காக இன்றைய தினம் இந்திய அணி வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
New York
— BCCI (@BCCI) May 29, 2024
Bright weather good vibes and some foot volley
Soham Desai, Strength & Conditioning Coach gives a glimpse of #TeamIndia's light running session #T20WorldCup pic.twitter.com/QXWldwL3qu
இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியையை பிசிசிஐ தங்களது சமீக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அக்காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் இந்திய அணியானது ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் தங்களது முதலாவது லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now