WPL 2023: மெக்ராத் போராட்டம் வீண்; வாரியர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

மகளிர் பிரீயர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ர யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் மெக் லானிங். ஷஃபாலி வெர்மா 17 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.
Trending
ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் விளையாடி 22 பந்தில் 34 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஜெஸ் ஜோனாசென் 20 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களை விளாசி மிகச்சிறப்பாக முடித்து கொடுத்தார். மெக் லானிங்கின் அரைசதம், ஜெமிமாவின் பொறுப்பான பேட்டிங் மற்றும் ஜொனசெனின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 211 ரன்களை குவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அலிசா ஹீலி 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஸ்வேதா ஒரு ரன்னுடனும், கிரன் நவ்கிரே 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா - தஹ்லியா மெக்ராத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தேவிகா வைத்யா 23 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிர்டையாக விளையாடிய தஹ்லியா மெக்ராத் அரைசதம் கடந்து இறுதிவரை போராடினார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தஹ்லியா மெக்ராத் 50 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 90 ரன்களைச் சேர்த்திருந்தார். இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் யுபி வாரியர்ஸ் அணியால் 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி சீசனின் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now