
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அனால் இப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிர்பார்த்த தொட்க்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ஆர்யா தேசாய் 5 ரன்னிலும், உமாங் குமார் 2 ரன்னிலும், சௌரவ் சௌகான் ரன்கள் ஏதுமின்றியும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் உர்வில் படேல் 26 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் அக்ஸர் படேலும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விஷால் ஜெய்ஸ்வால் - ஹெமங்க் படேல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளியாடிய ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்னில் நடையைக் கட்ட, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹெம்ங்க் படேல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்தார்.