Advertisement

டின்பிஎல் 2021: ஜூலை 19 முதல் ஆரம்பமாகும் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா!

நடப்பாண்டு ஆண்டு டிஎன்பிஎல் தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement
Tamil Nadu Premier League to begin from July 19, all matches in Chennai
Tamil Nadu Premier League to begin from July 19, all matches in Chennai (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 08, 2021 • 11:47 AM

ஐபிஎல் போட்டிகளைப் போலவே ஒவ்வொரு மாநிலங்களும் ஊள்ளூர் அணிகளை வைத்து டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன. அதில் மிகவும் பிரபலமானது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடர். இதுவரை நான்கு சீசன்களைக் கடந்துள்ள இத்தொடரின் ஐந்தாவது சீசன் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 08, 2021 • 11:47 AM

இந்நிலையில் 8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கு தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. 

Trending

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறுகையில் ‘2021ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது. கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு 9ஆ, தேதி முதல் அணியினர் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்க உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். 

அதன்படி 5ஆவது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் வருகிற ஜூலை19ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15ஆம் தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 20ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து 24ஆம் தேதி நெல்லை ராயல் கிங்சையும், 28ஆம் தேதி சேலம் ஸ்பார்டன்ஸையும், ஆகஸ்டு 1ஆம் தேதி திண்டுக்கல் டிராகன்சையும், 4ஆம் தேதி மதுரை பாந்தர்ஸையும், 6ஆம் தேதி கோவை கிங்சையும், 8ஆம் தேதி திருச்சி வாரியர்சையும் எதிர்கொள்ளவுள்ளது

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement