
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்துள்ளனர்.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறு அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு முதலிரண்டு போட்டிகளில் இடம்பேறமல் இருந்த நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்வால் ஆகியோர் இப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவினர், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுலா துறையினருடன் இணைந்து இன்று ஜிம்பாப்வேவில் உள்ள தேசிய வனவிலங்குகள் சரணாலத்தை பார்வையிட்டனர். இதுகுறித்த புகைப்படங்களை பிசிசிஐ தங்களது ஆதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
— BCCI (@BCCI) July 9, 2024