சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம் .

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
Trending
இதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இத்தொடருக்கான அணியை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் விளையாட வாய்ப்புள்ள உத்தேச அணியை இப்பதிவில் பார்ப்போம். இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது இடங்களும் உறுதி என்பதும் தெரிந்ததே.
இதுதவிர்த்து கூடுதல் தொடக்க வீரர் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடிக்க வய்ப்புள்ளது. அவர் தவிர்த்து உள்ளூர் போட்டிகளில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் விக்கெட் கீப்பர்களுக்கான தேர்வில் கேஎல் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.
Team India’s Probable Squad for the Champions Trophy!!#ChampionsTrophy #India pic.twitter.com/Rya0POZkUg
— CRICKETNMORE (@cricketnmore) January 7, 2025
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திரா ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் இடம்பிடிக்க அதிகளவு வாய்ப்புள்ளது. இதில் நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தரும் தேர்வுசெய்யப்படலாம். மேற்கொண்டு பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முகமது ஷமியின் உடற்தகுதி பொறுத்தே அவரது தேர்வு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Win Big, Make Your Cricket Tales Now