
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 270 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 50, சௌத் ஷகீல் 52 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி சேஸிங் செய்த போது பாகிஸ்தான் கடைசி சில ஓவர்களில் மட்டும் விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தென் ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. 10 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்து சரிந்து 48வது ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி விக்கெட்டுக்கு வந்த ஷம்சி அவுட் ஆகி விடுவாரோ என்ற பதற்றம் அனைவருக்குமே இருந்தது.