
டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் உண்மையான கிரிக்கெட் என நூறாண்டு காலமாக விளையாடி வந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புயல் போல் வந்து அனைத்து ரசிகர்களையும் இழுத்தது.தற்போது காலம் மாற மாற டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்களை தற்போது கவர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் தங்களுக்கென தனியாக டி20 தொடர்களை நடத்த அனைத்து கிரிக்கெட் நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
ஐபிஎல் தொடர் பாணியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,வங்கதேசம், பாகிஸ்தான் என முக்கிய கிரிக்கெட் நாடுகளில் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்து இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஐசிசிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதன்படி டெஸ்ட் போட்டிகளை இனி 6 அணிகள் மட்டுமே விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை 12 அணிகள் விளையாடினால் அது சவாலான விஷயமாக இருக்காது. இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பலமான அணிகள் மட்டுமே இனி டெஸ்ட் கிரிக்கெட்டை அவர்களுக்குள் விளையாட வேண்டும்.