டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை - பிரையன் லாரா!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலியின் ஓய்வு முடிவை ஏற்க மறுத்ததுடன் அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை. அவர் நிச்சயம் கொண்டாடப்படுவார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதில்லை.
அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தில் நிச்சயம் 60 க்கு மேல் சராசரியான ரன்களை எடுப்பார்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பிரையன் லாராவின் இன்ஸ்டா பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் இந்திய அணியின் வீரர் அம்பத்தி ராயுடுவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Also Read: LIVE Cricket Score
தற்போது 36 வயதான விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஆண்டு, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now