
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (நவ.18) செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளும் சிக்ஸர்களையும் பறக்கவிட, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.