ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது - உலகக்கோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி!
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது. தொடரில் நாங்கள் உருவாக்கி வைத்திருந்த வெற்றி பயணத்தை இறுதி வரை தொடரவும், இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் நூறு சதவீதம் முயற்சித்தோம். ஆனால், இறுதிப் போட்டியில் எங்கே தவறு செய்தோம் என்பதை விவரிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now