
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ருத்ர தாண்டவமாடிவர் பிரித்வி ஷா. அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை பார்த்து இந்தியாவின் எதிர்கால சேவாக் என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கு மிகவும் மோசமான காலமாக இருந்து வருகிறது. ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கிய பிரித்வி ஷா அதன் பின்னர் உடல் எடை அதிகம் எனக்கூறி இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.
அனைத்து சவால்களையும் மீறி ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தது. எனினும் ப்ளேயிங் 11இல் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது மீண்டும் கெட்ட காலம் அவரை சூழ்ந்துள்ளது. சமீபத்தில் பிரபல இன்ஸ்டாகிராம் புகழ் சப்னா கில்லுக்கும் பிரித்விக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.
தன்னை ஹாக்கி பேட்டால் தாக்க வந்ததாக சப்னா கில் மீது பிரித்வி ஷா காவல்துறையில் புகார் கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்வி தான் மதுபோதையில் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டதாக சப்னா கில் வழக்கு போட்டார். இதுகுறித்த வழக்கே இன்னும் நிலுவையில் உள்ள சூழலில் பிரித்வி ஷாவுக்கு காதலிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.