
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரில் ஏற்கெனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெறுள்ளன. இதன்மூலம் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவிற்கு பிறகு இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ச்வால் குறித்து கூறிய கருத்து பெரும் விமர்சனங்களை எழுப்பியது.
அப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் என இரட்டை சதமடித்து அசத்தினார். அதுகுறித்து பேசிய டக்கெட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இவ்வாறு விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர் எங்களுடைய பாஸ்பால் அனுகுமுறையைப் பார்த்து தான் இப்படி அடிரடியாக விளையாடுகிறார் என்று கூறினார். இது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, பல முன்னாள் வீரர்களின் எதிர்ப்பையும் சந்தித்தது.