ரோஹித் பேட்டராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அசத்துவார் - ஜாகீர் கான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொடராக இது அமைந்துள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்றைய தினம் ஹைத்ராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Trending
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கியது முதலே சவாலான சூழ்நிலைகளிலும் அவர் சதமடித்து சத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிலும் அவர் சென்னை மைதானத்தில் விளையாடிய ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்து போட்டியை தீர்மானிக்கும் இன்னிங்ஸாக மாறியது. ரோஹித் சர்மா அனைத்து விதமான போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர் போதுமான அளவிற்கு நம்பிக்கை அளித்து வருகிறார். அண்மையில் முடிவடைந்த உலகக் கோப்பை தொடரில் அவரது தலைமைப் பண்பை அனைவரும் பார்த்தோம்.
இது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் ஒரு பேட்டராக மட்டுமல்லாமல் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம். எனெனில் அவர் வீரர்களை எவ்வாறு சுழற்ச்சி முறையில் பயன்படுத்துவார் என்பதை பார்க்க வேண்டும். ஏற்கெனவே உலகக்கோப்பை தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் நிச்சயம் சிறந்த கேப்டனாக நிரூபிக்கப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now