
‘There’s a different kind of enjoyment playing under Rahul sir’: Prithvi Shaw (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த அணிக்கு பேட்டிங் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வழிநடத்த உள்ளார்.
இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவது குறித்த நினைவலைகளை இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரித்வி ஷா“ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவது மாறுபட்ட அனுபவமாக இருக்கும். அது ஒருவிதமான மகிழ்ச்சியை வழங்கும். அண்டர் 19 அணிக்கு அவர்தான் எங்களது பயிற்சியாளர். அவரது பேச்சு தொடங்கி கிரிக்கெட் அனுபவங்களை பகிர்வது வரையில் அது ஒரு தனி சுகம்.