
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துடன், இரண்டாவது முறையாக கோப்பையும் வென்றும் அசத்தியது. மேலும் இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு இருந்தது.
இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் 4 என்ற எகனாமியில் பந்து வீசி எதிரணி பேட்டர்களில் ஒவ்வொரு முறையும் நிலை குழைய செய்தார். இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு உலகெங்கலும் இருந்து வழ்த்துகள் குவிந்தது. அதன்பின் தற்போது ஓய்வில் இருக்கும் அவர் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் இணைவார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்றிருந்தார். இதையடுத்து இந்நிகழ்ச்சிக்கு வருகைத் தந்த பும்ராவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.