
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது நெருங்கி வரும் இவ்வேளையில் அந்தத் தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அந்த தொடரில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்ததால் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு தயாராகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பையில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்க்கப்படுகின்றன. அதே வேளையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் சரிசமமான பலத்துடன் உள்ளதால் இம்முறை கோப்பையை கைப்பற்றுவதில் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஏகப்பட்ட முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது.