ஹாட்ரிக் கோல்டன் டக் அடித்த சூர்யகுமார்; மோசமான சாதனையில் முதலிடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலமாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியெறினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களையும், ஷுப்மன் கில் 37 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றீயது.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் ஆஷ்டன் அகரின் பந்தில் கிளீன் போல்டானார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டில் வெளியேறியதன் மூலமாக தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் டக் அவுட்டில் வெளியேறினார். கடந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக இது போன்று யாரும் ஆட்டமிழந்தது கிடையாது. முதல் முறையாக ஹாட்ரிக் முறையில் கோல்டன் டக்கில் வெளியேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இது போன்று யாரும் ஆட்டமிழந்தது கிடையாது. முதல் முறையாக ஹாட்ரிக் முறையில் கோல்டன் டக்கில் வெளியேறிய முதல் வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது.
Win Big, Make Your Cricket Tales Now