
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடர் செப்டம்பர் 03ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய பாகிஸ்தான் டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி அணியில் கேப்டனாக ஷான் மசூத் தொடரும் நிலையில், அணியின் புதிய துணைக்கேப்டனாக சௌத் சகீல் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் அணியானது கடந்த ஆண்டு முதல் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டது. இதனால் அந்த அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த விஷயத்தில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தானின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், வரும் போட்டிகளில் தங்கள் அணி மேம்படும் என்று கூறியுள்ளார்.