
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28ஆஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்களை குவித்தது. நெதர்லாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பால் மெக் கீரன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.