Advertisement

ஆஃப்கானிஸ்தான் இந்த வெற்றியை தொடர வாய்ப்புள்ளது - ஆகாஷ் சோப்ரா!

கடந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணித்த போது ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. ஆனால், ஆப்கானிஸ்கான் அதே வங்கதேசத்தை வீழ்த்தியது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement
"This is the same Bangladesh where we lost the series" - Aakash Chopra! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 11, 2023 • 03:13 PM

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளதி.  

Bharathi Kannan
By Bharathi Kannan
July 11, 2023 • 03:13 PM

இந்நிலையில் இத்தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய அவர், “ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் ஆஃப்கன் வீழ்த்தியுள்ளது. இதே வங்கதேச அணியிடம் தான் கடந்த முறை நாம் தொடரை இழந்தோம். அந்த தொடரில் ரோஹித் காயமடைந்தார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. கடைசிப் போட்டியில் இஷான் கிஷன், வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசி வருகின்றனர். பேட்டிங்கில் இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரால் அபாரமாக உள்ளது. இந்தியாவில் வரும் உலகக் கோப்பை தொடரிலும் இதே ஆட்டத்தை ஆஃப்கானிஸ்தான் தொடர வாய்ப்பு உள்ளது. அங்குள்ள சூழல் தான் இங்கும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement