இந்திய அணியின் பலம், பலவீனம் இதுதான் - ரவி சாஸ்திரி!
2022 டி20 உலககோப்பையில் இந்தியாவின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி விளக்கம் அளித்துள்ளார்.
டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு இன்னும் 18 நாட்களே உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்த்ரி இந்தியா குறித்து தனது கருத்தை பதிவிட்டார்.
அதில், “ டி20 உலககோப்பை தொடர் என்பது சவால்கள் நிறைந்தது. அந்த தொடரில் நீங்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும். முதல் போட்டியிலிருந்தே வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். முதலில் நீங்கள் தோல்வி அடைந்தால், பிறகு உங்களுக்கு கஷ்டம் தான். மற்ற அணிகளின் அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டும்.
Trending
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பலமே அதன் பேட்டிங்காக தான் இருக்கும். ராகுல், கோலி, சூர்யகுமார் என அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் உள்ளதை நல்ல விசயமாக பார்க்கிறேன். அந்த தொடரில் பங்கேற்கும் அணியிலேயே இந்தியா தான் நல்ல பலமான பேட்டிங் வரிசை உடைய அணி. ஆனால் பந்துவீச்சில் பலவீனம் உள்ளது.
இந்திய அணியில் பும்ரா இல்லாதது பேரிழப்பு தான். ஆனால் அதனை பின்னடைவாக பார்க்காமல் மற்ற வீரர்கள் நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று இதனை கருத வேண்டும். டேத் ஓவர் எனப்படும் கடைசி கட்ட ஓவர்களில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதில் இந்தியா சரியான வீரர்களை கண்டறிந்து விளையாடுவார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் இந்தியாவின் ஃபில்டிங் மிகவும் மோசமாக உள்ளது. இப்படி ஒரு ஃபில்டிங் இருந்தால் உங்களால் போட்டியை வெல்ல முடியாது. உலககோப்பையை பொறுத்தவரை எந்த அணி நன்றாக ஃபில்டிங் செய்கிறார்களோ, அவர்கள் தான் வெல்வார்கள். ஃபில்டிங் இப்படி இருந்தால், பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு போட்டியிலும் கூடுதலாக 15 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now