
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 21 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
உலக கோப்பை தொடர் நடைபெறும் இந்த ஆண்டில் இந்திய அணி 269 ரன்களை கூட எட்ட முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவும் தொடர்ந்து கோல்டன் டெக் ஆவது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய கவாஸ்கர், “ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் சிங்கிள்ஸ், பவுண்டரி என ரன்கள் வறண்டு விட்டது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. பெரிய ஷாட் ஆடி தங்களது விக்கெட்டை இழந்து விட்டார்கள். இந்த மாதிரி சமயத்தில் நீங்கள் விளையாடி பழகவில்லை. முதலில் இந்த தவறை சரி செய்தால்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.