
Tilak Varma County Century: நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம்ஷையர் மற்றும் ஹாம்ஷையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சௌத்தாம்ப்டனனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்ஹாம்ஷையர் அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 578 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லிண்டன் ஜேம்ஸ் 203 ரன்களையும், ஜேக் ஹைய்ன்ஸ் 103 ரன்களையும் சேர்த்தனர். ஹாம்ஷையர் தரப்பில் கைல் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஹாம்ஷையர் அணியில் தொடக்க வீரர்கள் ஜோய் வெதர்லே மற்றும் ஃப்ளெட்சா மிடில்டன் ஆகியோர் தலா 52 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய நிக் கிப்பின்ஸ் 23 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.