Advertisement
Advertisement
Advertisement

உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டிம் பெயின்!

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 17, 2023 • 13:23 PM
Tim Paine retires from all forms of domestic cricket!
Tim Paine retires from all forms of domestic cricket! (Image Source: Google)
Advertisement

கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46ஆவது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 36 வயது டிம் பெயின், 35 டெஸ்டுகள், 35 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்றாலும் 2019 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை சமன் செய்து கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. 

அதன்பின் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் டிம் பெயின்.  கடந்த 2017 ஆண்டில் கிரிக்கெட் டாஸ்மேனியா அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பினார். இதுதொடர்பான செய்திகள் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாகச் சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

Trending


அதில் டிம் பெயின், விதிமுறைகளை மீறவில்லை என்பதால் தண்டனையிலிருந்து தப்பினார். இந்நிலையில் இந்தச் சர்ச்சை ஊடகங்களில் வெளியானதால் இச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நீடிப்பது உகந்ததாக இருக்காது எனக் கருதி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரராக இடம்பெறத் தயார் என கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது அறிவித்தார் டிம் பெயின். 

ஆனால் ஆஸ்திரேலிய அணியில் டிம் பெயின் நீடிப்பது அணிக்குத் தொந்தரவாக இருக்கும் எனக் கருதப்பட்டது. அதனால் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 2022-23இல் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கான ஒப்பந்தமும் டிம் பெயினுக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். 

மனநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து டிம் பெயின் தற்காலி ஓய்வு எடுப்பதாக 2021 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து விதமான உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக டிம் பெயின் அறிவித்துள்ளார். இந்த வாரம் தனது கடைசி ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் ஆட்டத்தில் பங்கேற்றார். பத்து மாத ஓய்வுக்குப் பிறகு இந்தப் பருவத்தில் ஏழு முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement