டிஎன்பிஎல் 2023: ஆரஞ்சு & பர்பிள் தொப்பியை தட்டிச்சென்ற ஷாருக், அஜித்தேஷ்!
டிஎன்பிஎல் தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
Trending
இந்நிலையில்,இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட் வீழ்த்திய கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியத்திற்க்கு வழங்கப்பட்டது. அதேசமயம் நடப்பு சீசன் டிஎன்பிஎல் தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் ஆரஞ்சு கேப் விருதை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.
அஜித்தேஷ் குருஸ்வாமி இந்த தொடரில் மொத்தம் 1 சதம் ,3 அரைசதம் உட்பட 385 ரன்கள் குவித்து உள்ளார். மேலும் அதிக விக்கெட் எடுத்தவருக்கு அளிக்கப்படும் பர்பிள் தொப்பிக்கான விருது 17 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது.
Win Big, Make Your Cricket Tales Now