
திண்டுக்கல்: மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சேப்பார் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர வீரர் விஜய் ஷங்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ராம் அரவிந்த் ரன்கள் ஏதுமின்றியும், பாலச்சந்தர் அனிருத் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சதுர்வேத் மற்றும் ஆதீக் உர் ரஹ்மான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதுர்வேத் 31 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து சரத் குமார் ஒரு ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆதீக் உர் ரஹ்மான் 41 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தானர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் முருகன் அஸ்வின் 38 ரன்களையும், சரவணன் 20 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்த்ர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கில்லீஸ் தரப்பில் விஜய் ஷங்கர் 3 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து சூப்பர் கில்லீஸ் அணி விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டியில் தாமதம் ஏற்பட்டது.