
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது. அதன் படி நியூசிலாந்து சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் ஜேக்கப் பெட்தெலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் குழந்தை பிறப்பின் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள ஜேமி ஸ்மித்திற்கு மாற்றாக ஒல்லி போப் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் உறுதியாகியுள்ளது.