
South Africa Cricket: தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டோனி டி ஸோர்ஸி காயம் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி தொடரை வெல்லும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலிலும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி பின்னடைவை சந்தித்துள்ளது.