IND vs NZ ODI: அதிக ரன்கள் எடுத்த டாப்-5 தற்போதைய வீரர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த தற்போது விளையாடிவரும் வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த தற்போது விளையாடிவரும் வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
5. ஷுப்மன் கில்
Trending
இந்த பட்டியலில் இந்திய அணியின் 'பிரின்ஸ்' ஷுப்மான் கில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த 25 வயது பேட்ஸ்மேன் நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 11 ஒர்நாள் போட்டிகளில் விளையாடி 74 என்ற சராசரியில் 592 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவர் 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்களையும் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. டாம் லேதம்
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் அனுபவமிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லேதம் நான்காவது இடத்தில் உள்ளார். இந்த இடது கை பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு எதிராக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் அவர் 23 இன்னிங்ஸ்களில் 46.84 சராசரியில் 890 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக டாம் லேதம் 2 சதங்களும், 5 அரை சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ரோஹித் சர்மா
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம் பெறாமல் இருக்க வாய்ப்பில்லை. நியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா 30 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் விளையாடி 36.92 சராசரியுடன் 997 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 சதங்களும், 5 அரை சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. கேன் வில்லியம்சன்
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக 30 போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 45.48 சராசரியில் 1,228 ரன்களைச் சேர்த்துள்ளார். அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லருக்குப் பிறகு (1385 ரன்கள்), ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களைச் சேர்த்த வீரராகவும் வில்லியம்சன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1. விராட் கோலி
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவுள்ள விராட் கோலி 57 என்ற சராசரியில் 1,656 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 6 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களையும் அடித்துள்ளார். மேற்கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை (1750 ரன்கள்) 94 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளார். இதனால் இப்போட்டியில் அவர் சதம் அல்லது 95 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now