ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். அதிலும் குறிப்பாக இந்த பட்டியலில் உள்ள மூன்று வீரர்கள் தற்போது இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5. சுரேஷ் ரெய்னா
Trending
மிஸ்டர் ஐபிஎல் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் 5ஆம் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லையன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்களை எடுத்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு தனது கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடிய ரெய்னா 2022ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. டேவிட் வார்னர்
இந்த சிறப்புப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்டர் டேவிட் வார்னர் 4ஆம் இடத்தில் உள்ளார். தற்போது 38 வயதான வார்னர் ஐபிஎல் தொடரில் இதுவரை 184 போட்டிகளில் விளையாடி, 6565 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இரண்டு மூறை ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்ற இவர், நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. ரோஹித் சர்மா
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அதிரடி பேட்ஸ்மேன் இதுவரை இந்தியன் பிரீமியர் லீக்கில் 257 போட்டிகளில் விளையாடி, 6628 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும், மும்பை அணிக்கு கேப்டனாக இருந்தபோது, ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஷிகர் தவான்
இந்த சிறப்புப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், 222 போட்டிகளில் 6769 ரன்களை எடுத்துள்ளார். கடந்தாண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவான் சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
1. விராட் கோலி
Also Read: Funding To Save Test Cricket
இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 8000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் தற்போது வரை விராட் கோலி மட்டும் தான். ஐபிஎல் தொடரில் இதுவரை 252 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8,004 ரன்களை எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே ஒரு அணிக்காக மட்டுமே 18 சீசன்களாக விளையாடி வரும் ஒரே வீரர் எனும் சாதனையையும் விராட் கோலி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now