ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களில் ஒருவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. சுனில் நரைன்
Trending
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். அதன்படி அவர் இதுவரை 177 போட்டிகளில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், சுனில் நரைன் 536 டி20 போட்டிகளில் விளையாடி 574 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. புவனேஷ்வர் குமார்
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம்பெறாமல் இருப்பது சாத்தியமில்லை. இதுவரை ஐபிஎல் தொடரில் 176 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பவர்பிளே மற்றும் டெத் ஓவர்கள் இரண்டிலும் அற்புதமாக பந்து வீசும் திறன் அவரிடம் உள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் இதனை செய்வார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
3. டுவைன் பிராவோ
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடிப்பவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோ. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லையன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. பியூஷ் சாவ்லா
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர் முன்னாள் இந்திய வீரரான பியூஷ் சாவ்லா தான். அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி 192 போட்டிகளில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1. யுஸ்வேந்திர சாஹல்
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் இந்திய அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைத்த ஒரே பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார். அதன்படி அவர் இதுவரை 160 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் 205 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now