தென் ஆப்பிரிக்காவுடனான தோல்வி ஏமாற்றமாக இருந்தது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்திய அணி நாளை வங்காதேசத்துடன் மோதுகிறது. அதைத்தொடர்ந்து 6ஆம் தேதி ஜிம்பாப்வே உடன் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஒன்றில் தோல்வியடைந்து மற்றொன்றில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
Trending
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது பற்றி பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “பெர்த் ஆட்டம் ஏமாற்றமாக அமைந்தது. நாங்கள் நன்றாகப் போராடினோம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால்... நாங்கள் சில தவறுகளும் செய்தோம், கொஞ்சம் வேறு மாதிரியான முடிவுகள் அமைந்திருக்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டமும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நாங்கள் நன்கு விளையாடி இனிவரும் ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும். (உலகக் கோப்பையை வெல்ல) அடுத்து நான்கு ஆட்டங்களை வெல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now